Tuesday 27 September 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான ஆய்வு குழு குழந்தைகளுக்கு பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு துளிர் இல்ல  குழந்தைகளுக்கு  பயிற்சி 
செப். 23  அன்று அதலை ஐன்ஸ்டீன் துளிர் இல்லத்தில்  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு குழந்தைகளுக்கு  பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்அதலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை  பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.  ஊமையா பாரதி  தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இரண்டு துளிர் இல்லத்தில் இருவது 10 ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பயிற்சியில் ஆய்வு தலைப்புக்கள் குறித்து துளிர் இல்ல ஒறிங்கினைப்பாளர் B ஜோதிமுருகன் விளக்கினர் . இப்பயிற்சியில் 60  க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கலந்துகொண்டனர். மீளும் இப்பயிற்சியில் அறிவியல் ஆசிரியை திருமதி. சண்முகசுந்தரி உடன் இருந்து தலைப்புக்கள் , ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து வழிக்காட்டினார்கள். இறுதியாக துளிர் இல்ல குழந்தை விநோதினி நன்றி தெரிவித்து கொண்டனர்.

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை
 செப்டெம்பர் 25  அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் துளிர் அறிவியல் மைய கருத்தாளர்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இக் கூட்டத்தில் முதல்கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை தற்போது பயன்பாட்டில் உள்ள சமசீர் கல்வி அறிவியல்  புத்தகத்திலிருந்து செயல்பாடுகளை தொகுத்து அதற்கான எளிய அறிவியல் பரிசோதனை உருவாக்கப்பட்டது. இதில் ஆறாம் வகுப்புக்கான பரிசோதனைகளை டாக்டர் ஈஸ்வரி , ஜோதிமுருகன் , மணிமுகிலன், தியாகராஜன் ஆகியோரும் , ஏழாம் வகுப்பிற்கு பேரா. ராஜாமணிக்கம்,  ஐஸ்வர்யா, ராமர், எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் மணிமுருகன், அமலராஜன், காயத்திரி ஆகியோரும் தயாரித்தனர். இப் முகாமில் 25 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தயாரிக்கப்பட்டது. இப் பயிற்சியல் மாவட்ட செயலர் கடசாரி, மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப் பயிற்சியின்தொடர்ச்சியாக அக்டோபர் 1 , 2  தேதிகளில் தேனீ மாவட்டத்தில் நடைபெற உள்ளது.