Saturday 15 October 2011

துளிர் அறிவியல் மையத்தின் - உலக விண்வெளி வாரம் கருத்தரங்கம்


துளிர் அறிவியல் மையத்தின்  - உலக விண்வெளி வாரம்
கருத்தரங்கம்






அக்.4  முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் மையமாக துளிர் அறிவியல் மையத்தின் சார்பாக  விண்வெளி பற்றிய கருத்தரங்கம், அக் 4 அன்று  அரங்கத்தில் நடைபெற்ற்து. இக்கருத்தரங்கத்தில் கருத்தாளராக திரு.இல.நாராயணசாமி கலந்துகொண்டு விண்வெளி பற்றிய செய்திகளை குழந்தைகள் மத்தியில் எளிய முறையில் விளக்கினார்.  மேலும் உலக  விண்வெளி வாரத்திற்கான காரணம், விண்வெளியில் உள்ள பல்வேறு செய்திகளை, விண்வெளிக்கு பயணம் செய்தவர்கள், கோள்கள் போன்ற கருத்துக்களை  குழந்தைகளுக்கு எளிமையாக விளக்கினார். இக்கருத்தரங்கத்தில் துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர்  இக்கருத்தரைங்கத்தின் SIRD தயாரித்துள்ள பெண் சிசு கொலை தொடர்பான உயிர் என்ற குறும்படம் சார்பாக குழந்தைகளுக்கு திரையிட்டு விவாதம் நடைபெற்றது. இறுதியாக ஐசக் நியூட்டன் துளிர் இல்ல மாணவர் மாதவன் நன்றியினை தெரிவித்தார்.

Friday 7 October 2011

துளிர் அறிவியல் மையக் குழந்தைகள் அறிவியல் சுற்றுலா




துளிர் அறிவியல் மையக் குழந்தைகளின்
அறிவியல் சுற்றுலா
அக்.4 ( செவ்வாய்) அன்று துளிர் அறிவியல் மையக் குழந்தைகளுக்கான அறிவியல் சுற்றுலாவாக மதுரை சொக்கிகுளம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு மருத்துவ பூச்சிகள் ஆராய்ச்சி மையத்திற்கு ( ICMR ) சென்றனர்.  சுற்றுலாவாக வந்திருந்த துளிர் இல்லக் குழந்தைகள் 53 நபர்களை மூன்று குழுவாக பிரித்து அவர்களுக்கு ஆய்வகத்தில் எவ்வாறு ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பதை விளக்கினர். மேலும் ஆய்வகத்தில் உள்ள கொசுக்களின் ஆராய்ச்சி, கொசுக்களின் வரலாறு, அதனால் ஏற்படும் நோய்கள், அது வளரும் சூழல், புதிய வகை கொசுக்கள், அதன் வளர்ச்சி பற்றி, மதுரையில் கண்டுபிடித்த கொசுக்கள் என இன்னும் பல கருத்துக்களை முழுமையாக மையத்தில் பணியாற்றி வரும் ஆராய்ச்சி மையத்தின் நூலகர் திரு.ராஜமன்னார், ஆய்வக தொழிநுட்ப உதவியாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பூமிநாதன் ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினர்.  இறுதியாக குழந்தைகளுக்கு மையத்தின் விஞ்ஞானி Dr.பரமசிவம் குழந்தைகள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தி, கொசுக்கள் பற்றி கேள்விகள் கேட்டு 10 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.  இறுதியாக மேற்கு கிளைத் தலைவர் திரு.P ஹரிபாபு நன்றி தெரிவித்தார். இச்சுற்றுலாவில் 8 கிராமத்தில் இருந்து 53 நபர்கள் கலந்துகொண்டனர். இச்சுற்றுலாவினை ஒருங்கிணைப்பாளர் பூ.ஜோதிமுருகன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.